3 நடிகைகளை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தாரா ராஜ்குந்த்ரா?

  • IndiaGlitz, [Thursday,July 22 2021]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 நடிகைகளை அவர் வலுக்கட்டாயமாக ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு செயலிக்காக ஆபாச படங்கள் எடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா அனுப்பியதாகவும், அதற்கான ஆதாரங்கள் சிக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் மூன்று நடிகைகள் காவல்துறையில் தற்போது புகார் அளித்துள்ளனர். அவர்கள் தங்களை ராஜ்குந்த்ரா வலுக்கட்டாயமாக நிர்ப்பந்தப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக அளித்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பை போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் ராஜ்குந்த்ரா லஞ்சம் கொடுத்ததாகவும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.