ஆசிட் வீசுவதாக மிரட்டல்.. சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்த பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற நடிகைக்கு ஆசிட் வீசுவேன் என கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில், பிக் பாஸ் 8 சீசனில் போட்டியாளராக இருக்கும் அருண் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அருண் பிரசாத் செய்யும் சில விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் நிலையில், "அவருடைய செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது" என்று கடந்த வாரம் அர்ச்சனா பதிவு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அர்ச்சனா தனது எக்ஸ் பக்கத்தில் தனக்கு மிரட்டல் வந்ததாக பதிவு செய்துள்ளார். "வாழ்க்கை என்பது கிரிக்கெட் போல. கடந்த போட்டியில் நீங்கள் விளையாடி இருந்தாலும் உங்களுக்கு பிடித்த அணியை நீங்கள் உற்சாகப்படுத்தலாம். அதுபோல்தான் நானும் செய்தேன். ஆனால் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக சிலர் மிரட்டுகிறார்கள். அது குறித்த ஸ்கிரீன் ஷாட்களை நான் பகிர்ந்துள்ளேன். இது எல்லை மீறிய ஒன்று. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
அதன் பிறகு, சற்றுமுன் அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்த ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@tncybercrimeoff @tnpoliceoffl pic.twitter.com/21kIeIFx4T
— Archana Ravichandran (@Archana_ravi_) December 4, 2024
Life is just like cricket, you can cheer for your favorite team even if you’ve played in the last game. For this, I’ve received rape and acid attack threats. This screenshot is just one example—my DMs are filled with filthy, disgusting messages. This is beyond hurtful and way… pic.twitter.com/gmdxYFjA5T
— Archana Ravichandran (@Archana_ravi_) December 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments