ஆசிட் வீசுவதாக மிரட்டல்.. சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்த பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற நடிகைக்கு ஆசிட் வீசுவேன் என கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட அர்ச்சனா டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், பிக் பாஸ் 8 சீசனில் போட்டியாளராக இருக்கும் அருண் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அருண் பிரசாத் செய்யும் சில விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் நிலையில், அவருடைய செயல்களுக்கு நான் பொறுப்பாக முடியாது என்று கடந்த வாரம் அர்ச்சனா பதிவு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அர்ச்சனா தனது எக்ஸ் பக்கத்தில் தனக்கு மிரட்டல் வந்ததாக பதிவு செய்துள்ளார். வாழ்க்கை என்பது கிரிக்கெட் போல. கடந்த போட்டியில் நீங்கள் விளையாடி இருந்தாலும் உங்களுக்கு பிடித்த அணியை நீங்கள் உற்சாகப்படுத்தலாம். அதுபோல்தான் நானும் செய்தேன். ஆனால் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆசிட் வீசுவதாக சிலர் மிரட்டுகிறார்கள். அது குறித்த ஸ்கிரீன் ஷாட்களை நான் பகிர்ந்துள்ளேன். இது எல்லை மீறிய ஒன்று. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன், என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பிறகு, சற்றுமுன் அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்த ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திடீரென துறவறம் பூண்ட 'பாய்ஸ்' பட நடிகை.. தினமும் 300 பேருக்கு அன்னதானம் என அறிவிப்பு..!

ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகை திடீரென துறவறம் பூண்டதாகவும், தினசரி 300 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

25 ஆண்டுகால சின்னத்திரை நடிகர்.. புற்றுநோயால் இறந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சின்னத்திரையில் 25 ஆண்டு காலமாக நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் புற்றுநோய் காரணமாக காலமானதை தொடர்ந்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இளமை பருவத்திற்கு திரும்பிய தனுஷ்.. நயன்தாராவுக்கு வீடியோவை டேக் செய்த நெட்டிசன்கள்..!

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தற்போது இளமை பருவத்திற்கு திரும்பியதை போல கெட்டப்பில் உள்ளனர். இது குறித்த வீடியோக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு, நயன்தாராவுக்கு டேக் செய்து வருவது பரபரப்பை

சௌந்தர்யாவை பொளந்து விடுங்க சார்.. விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா பாடி லாங்குவேஜ் உடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எரிச்சல் அடைந்த பார்வையாளர்கள் 'சௌந்தர்யாவை

பவர் ஸ்டார் பவன் கல்யாணின்'ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்':  இறுதிக்கட்ட படப்பிடிப்பு..

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான 'ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1:  ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' மூலம் சரித்திரம் படைக்க உள்ளார்.