மீண்டும் இணையும் 'தோழா' கூட்டணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் கார்த்தி இணைந்து ‘தோழா’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி இணைந்துள்ள தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ’சர்தார்’ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதனை அடுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட கார்த்தி ’நாகார்ஜுனா அவர்கள் எப்போதும் என்னை பற்றி நன்றாக உணர வைத்துள்ளார் என்றும் இப்போது அவர் எனது படத்துக்கு ஆதரவாக இருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
‘தோழா’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்த நாகார்ஜுனா தற்போது கார்த்தியின் ’சர்தார்’ படத்தை தெலுங்கு மாநிலங்களில் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Chaos will be ?? with his ARRIVAL ! @Karthi_Offl 's Most Awaited Film #Sardar AP & TS Distribution Rights Bagged by #AnnapurnaStudios ??
— Annapurna Studios (@AnnapurnaStdios) June 27, 2022
WW Releasing this DIWALI ????#SardarDiwali ??@Psmithran @Prince_Pictures @RaashiiKhanna_ @rajisha_vijayan @gvprakash @RedGiantMovies_ pic.twitter.com/OwH14sbSDg
Dear @Karthi_Offl my brother!! Always cherished the moments I spent with you and looking forward for more!! You are going to rock tammudu!!god bless!! https://t.co/bU64nRR7Sr
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) June 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments