ஷாருக்கான் வீட்டின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்: டங்கி வெற்றியால் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

ஷாருக்கானின் 'டங்கி' படத்தின் கட்அவுட்டுகள் உடன் அவர் வீட்டிற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்து, ஷாருக்கான் உற்சாகமாக கையசைத்ததை ரசிகர்கள் கொண்டாடினர்..!

'டங்கி' படத்தின் மீதான மோகம் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்று வரும் தருணத்தில்.. ஷாருக்கின் ரசிகர்கள் அதை சூப்பர் ஸ்டாரிடம் வெளிப்படுத்துவதற்காக.. அவரது வீட்டிற்கு முன் திரண்டனர். இதனை கண்ட ஷாருக்கான், தனது அன்பை பகிர்ந்து கொள்ள அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.

கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட பெரிய கூட்டமொன்று... ஷாருக் கானின் வீடான மன்னத் பகுதியில் ஒன்று திரண்டனர்.‌ ஷாருக்கான் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கும் அவர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.. தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து.. பறக்கும் முத்தத்தை வழங்கி.. தனது மாயாஜால வசீகரத்தை வெளிப்படுத்தினார்.‌ 'டங்கி' திரைப்படத்தின் வெற்றியை... ரசிகர்களும், சூப்பர் ஸ்டாரும் கொண்டாடுவதற்காக ஒன்று கூடினர். ஒவ்வொரு ஆண்டும் ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வாழ்த்து தெரிவிப்பர். தற்போது 'டங்கி' படத்தின் வெற்றி.. ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமாக அமைந்தது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

More News

டிக்கெட் டு ஃபினாலே.. இறுதி மேடையை முத்தமிட போவது யார்? கடும் போட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுபவர்கள் யார் என்ற கேள்விகள்  பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது

கடும் போட்டியில் நிக்சன், மாயா.. இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும் என்றாலும் இந்த வாரம் எலிமினேஷனை பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 'தளபதி 68' அப்டேட் எப்போது? கிறிஸ்துமஸ் வாழ்த்தில் தெரிவித்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கொதித்து எழுந்த கீர்த்தி பாண்டியன்..!

 நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை

குடும்பத்துடன் நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. க்யூட் உயிர், உலகம் புகைப்படங்கள்..!

 நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.