ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல மின்னுகிறார் நடிகை குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டமன்றத் தேர்லுக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. இந்நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்குத் தொகுதியில் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பிரச்சார உக்தி மற்றவர்களைப் போல இல்லாமல் மக்களுடன் மிக நெருக்கம் காட்டும் விதமாக இருப்பதாகவும் இதனால் அப்பகுதியில் நடிகை குஷ்புவிற்கு ஆதரவு பெருகுவதாகவும் பாஜக சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடும் வெயில், கொரோனா பரவல் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அங்குள்ள இஸ்லாம் சமூகத்து பெண்களுடன் நெருங்கி பழகும் அவர் நேரடியாக ஒவ்வொரது வீட்டிற்கும் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதும் கடும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம் விளக்குத் தொகுதி பகுதியில் உள்ள அனைத்து குற்றம் குறைகளையும் நடிகை குஷ்பு மக்களைச் சந்தித்து நேரடியாக கேட்டு அறிந்து கொள்கிறார். அதோடு “நான் உங்கள் வீட்டுப்பெண்… என் தொகுதிக்காவும் தொகுதி மக்களுக்காகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என வாக்காளர்களின் கரங்களை பற்றி வாக்குறுதி அளிக்கிறார். இதனால் நடிகை குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு பகுதியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள 85% வீடுகளுக்கு நடிகை குஷ்பு நேரடியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதோடு அப்பகுதியின் அடிப்படை பிரச்சனைகளை மட்டுமல்லாது ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை நடிகை குஷ்பு அறிவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஏழை குடும்பங்களின் பெயரில் ரூ.1 லச்ம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருப்பதாக பாஜக சார்பில் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com