யாராலும் ரஜினி ஆக முடியாது: 'ரஜினி' படத்தில் நடிக்கும் ஹீரோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ரஜினி ரசிகராக ‘ரஜினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தில் நடித்து வரும் ஹீரோ ஒருவர், ‘யாராலும் இனி ரஜினி ஆக முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மகாராஜா, நெல்லு ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சத்யா ‘ரஜினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் ரஜினி ரசிகராக நடித்து வருகிறார். ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகிகளாக ஷெரின் மற்றும் சம்யுக்தா நடித்து வருகின்றனர் என்றும் மேலும் புகழ், பாலா பல உள்பட பலரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த படத்தில் ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடித்துள்ளதாகவும், ரஜினி பட வசனங்களை ஒரு சில இடங்களில் பேசினாலும் ரஜினி மாதிரி நடிக்க முயற்சிக்க வில்லை என்றும் ஏனெனில் ரஜினி போல் யாராலும் நடிக்க முடியாது என்றும் விஜய் சத்யா கூறியுள்ளார் .
இந்த படம் தன்னுடைய முந்தைய படங்களை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் இயக்குனர் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் என்றும் எனது கேரக்டர் குறித்தும் அவர் கேட்டறிந்தார் என்றும் பேட்டி ஒன்றில் விஜய் சத்யா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)