அஜித்தின் 'வலிமை'யில் இணைந்த இருமுறை தேசிய விருது பெற்ற கலைஞர்!

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

அஜித் நடித்த உள்ள ’வலிமை’ திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே

இந்தப் படத்தை ’நேர்கொண்டபார்வை’ படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ’வலிமை’ திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது இரண்டு முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது

’வலிமை’ படத்தில்தான் இணைந்துள்ளதை கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து போனி கபூர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்

More News

'தளபதி 64' படத்தில் இணையும் இரண்டு நடிகைகள்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளியன்று வெளியாகி ஒருபக்கம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பும்

அசுர சாதனை செய்த தமிழக அரசை கிண்டல் செய்த தமிழ் நடிகை!

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரமும் செய்துவிட்டு மதுவையும் விற்பனை செய்து அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கு மதுவிற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

குழந்தை சுர்ஜித் நிலை குறித்து உள்ளூர்க்காரர் ஒருவரின் அதிர்ச்சி தகவல்

நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சூர்ஜித் இந்த குழந்தை, வெள்ளி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த குழந்தையை வெளியே எடுக்க மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர் 

ஏடிஎம் மிஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: பெரும் பரபரப்பு 

இதுவரை ஏடிஎம் மிஷினை உடைத்து அதிலுள்ள பணத்தை மட்டுமே திருடர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் தற்போது ஏடிஎம் மிஷினையே தூக்கி சென்றுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை