தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப்பணி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதில், துப்பாக்கிச்சூடு அங்கு நடைபெற்றது. அப்போது மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 17 நபர்களுக்கு தமிழக அரசு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் மற்றும் காயமடைந்த17 பேரின் கல்வித்தகுதிக்கு தகுந்தாற்போல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று அவர்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"கடந்த 2018-இல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றாற்போல், கிராம உதவியாளராகவும், சமையலராகவும் பணியை துவங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட துறைகளின் கீழ் பணியாற்ற, 16 நபர்கள் இளநிலை உதவியாளராகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் அரசு சார்பாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout