கள்ளச்சந்தையில் மருந்து விற்று, குண்டர் சட்டத்தில் கைதான சகோதரர்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த, சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் மருந்துக்கடையில், மருந்துக்குப்பிகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்றுள்ளனர் சகோதரர்களான சண்முகம் (27) மற்றும் கணேசன் (29). இவர்களிடம் இருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றிய காவல் துறையினர், இவர்களை கைது செய்துள்ளனர். இதேபோல் மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், ரெம்டெசிவர் குப்பிகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.
சகோதரர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆய்வாளர் சபாபதி அறிக்கை வெளியிட்டதன் பேரில், இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சண்முகம் மற்றும் கணேசன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout