தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

 

தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களே கழிவுகளை நேரடியாக அகற்றுவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பது தொடருகிறது. இதைத் தடுக்க அவ்வபோது புதுப்புது கண்டுபிடிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அக்கண்டு பிடிப்புகள் முழுமையாக செயல்பாட்டு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சோமசுந்தரம் என்பவரின் வீட்டு கழிவுநீர்த் தொட்டியில் வேலைப் பார்த்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். கழிவுகளை அகற்றுவதற்கு பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற உத்திரவாதம் தொடர்ந்து பலத் தரப்புகளில் இருந்து அவ்வபோது கூறப்படுகிறது. ஆனால் ஊழியர்கள் இப்படி குழிக்குள் விஷவாயு தாக்கி இறப்பதும் தொடரத்தான் செய்கிறது. ஊழியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News

சமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!

திருமணத்திற்கு பின்னரும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்

சாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு??? CBI விசாரணையில் என்ன வித்தியாசம்???

சாத்தான் குளம் (ஜெயராஜ், பின்னிக்ஸ்) கொலை வழக்கு  விசாரணை தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப் பட்டு இருக்கிறது

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி: 29 வயது இளைஞர் கைது

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் 'போக்சோ' சட்டம் போட்டு குறையாத நிலையில் தற்போது தமிழகத்தில் 7 வயது சிறுமியை 29 வயது கொடூரன் பாலியல் பலாத்காரம்

கொரோனா தொற்றால் அச்சம்: கோவை இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டதால் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை

ரஜினி சொன்னதை பின்பற்றி வருகிறேன்: மாஸ்டர் பட நாயகி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அதாவது சசிகுமார் ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். பிளாஷ்பேக்கில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே வரும்