தூத்துக்குடி: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி மாவட்டம் கீழசெக்காரக்குடி பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதர்களே கழிவுகளை நேரடியாக அகற்றுவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பது தொடருகிறது. இதைத் தடுக்க அவ்வபோது புதுப்புது கண்டுபிடிப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அக்கண்டு பிடிப்புகள் முழுமையாக செயல்பாட்டு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சோமசுந்தரம் என்பவரின் வீட்டு கழிவுநீர்த் தொட்டியில் வேலைப் பார்த்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். கழிவுகளை அகற்றுவதற்கு பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற உத்திரவாதம் தொடர்ந்து பலத் தரப்புகளில் இருந்து அவ்வபோது கூறப்படுகிறது. ஆனால் ஊழியர்கள் இப்படி குழிக்குள் விஷவாயு தாக்கி இறப்பதும் தொடரத்தான் செய்கிறது. ஊழியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com