close
Choose your channels

தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா தூங்காவனம்?

Monday, September 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிவடைந்து தற்போது முழூவீச்சில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்களும் தற்போது கிடைத்துள்ளது.

'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த படம் தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே அதாவது நவம்பர் 6ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. தீபாவளி நவம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. எனினும் தீபாவளி விடுமுறை வெள்ளிக்கிழமை முதலே தொடங்கிவிடுவதால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் சம்பத், ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகிசேது, மதுஷாலினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் ரூ.50 கோடி செலவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment