'தூங்காவனம்' படத்தின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,October 22 2015]

கமல்ஹாசன், த்ரிஷா நடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு வெறும் 38 நாட்களில் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

உத்தமவில்லன், பாபநாசம் படங்களை அடுத்து 2015ஆம் ஆண்டில் ரிலீஸாகும் கமல்ஹாசனின் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கல் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் படங்களை போலவே தூங்காவனம்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெறும் 1மணி 38 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியாகும் மிகக்குறைந்த நிமிடங்கள் ஓடும் திரைப்படங்களில் ஒன்று 'தூங்காவனம்' என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த 'தூங்காவனம்' படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'விஜய் 60' இயக்குனர் யார்?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய்59' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில்...

''தரலோக்கல்'' கேரக்டருக்காக இறங்கி அடித்துள்ளார் அஜீத்: சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ''வேதாளம்'' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது....

'மேக்கிங் ஆஃப் ஆலுமா டோலுமா' ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அஜீத் ரசிகர்கள் உள்பட அனைவரையும் கவர்ந்த நிலையில்....

திரைவிமர்சனம் 'நானும் ரவுடிதான்' - ரசிக்கவைக்கும் ரவுடி

தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் , நாயகன் விஜய் சேதுபதி மற்றும் நாயகி நயன்தாரா... இந்தக் கூட்டணி அமைந்தவுடன் ‘நானும் ரவுடிதான்’ படம் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிட்டது. அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, டீசரும் ட்ரைலரும் பார்த்த அனைவரையும் கவர, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘நானு

'கபாலி'யின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று Cine Galaxy Inc....