'தூங்காவனம்' படத்தின் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,October 22 2015]

கமல்ஹாசன், த்ரிஷா நடித்துள்ள 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு வெறும் 38 நாட்களில் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

உத்தமவில்லன், பாபநாசம் படங்களை அடுத்து 2015ஆம் ஆண்டில் ரிலீஸாகும் கமல்ஹாசனின் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கல் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் படங்களை போலவே தூங்காவனம்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெறும் 1மணி 38 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியாகும் மிகக்குறைந்த நிமிடங்கள் ஓடும் திரைப்படங்களில் ஒன்று 'தூங்காவனம்' என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த 'தூங்காவனம்' படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.