'தூங்காவனம்' இயக்குனரின் அடுத்த படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது

அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் நடிக்கும் இந்த படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது

சென்னை மற்றும் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

சைமன் கிங் இசையில் சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவில் கதிர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது முற்றுப்புள்ளி இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.