'தூங்காவனம்' படத்தின் சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 28 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த் 'தூங்காவனம்' படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

'தூங்காவனம்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சர்டிபிகேட் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி படத்தில் எந்தவித கட்'டும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் ஓடுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'தூங்காவனம்' படம் சென்சார் ஆகிவிட்டதை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளில் அல்லது நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.