'தொடரி' - 'ஆண்டவன் கட்டளை' சென்னை வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,September 26 2016]

கடந்த வாரம் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' மற்றும் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகிய இரு படங்கள் வெளிவந்தன. இந்நிலையில் இந்த படங்களின் சென்னை வார இறுதி வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.
தனுஷின் தொடரி' சென்னயில் 23 திரையரங்க வளாகங்களில் 325 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,10,27,540 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் கடந்த 22 முதல் 25 வரையிலான 4 நாட்களில் இந்த படம் சென்னையில் ரூ.1,58,36,140 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' சென்னையில் 15 திரையரங்க வளாகங்களில் 211 காட்சிகள் திரையிடப்பட்டு, ரூ.73,08,550 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஜய்சேதுபதியின் பெஸ்ட் ஓப்பனிங் வசூல் படம் என்று கூறலாம்.

More News

சிம்புவின் 'AAA' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தனுஷின் 'கொடி' மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி-நேரம்

தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் 'கொடி' வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

'இமைக்கா நொடிகள்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

அதர்வா முரளி நடித்து தயாரிக்கும் 'செம போதை ஆகாதே' படத்தை அடுத்து அவர் நடிக்கவுள்ள 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும்,

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.