close
Choose your channels

'தளபதி 63' படத்தின் கனவு நாயகியின் பரபரப்பான கருத்து

Wednesday, November 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். மேலும் இன்னொரு நாயகியாக 'மேயாத மான்' இந்துஜா அல்லது ஸ்ரீதிவ்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 63' படத்தின் கனவு நாயகி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'விஜய், அட்லி படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். ஆனால் இந்த தடவை அந்த வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் விரைவில் விஜய் படத்தில் நடிப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் தனக்கு முழு ஆதரவு தரும் ரசிகர்களுக்கு தமிழில் 'நன்றி' என்று தெரிவித்து கொண்ட ராஷ்மிகா, விரைவில் தமிழ் படத்தில் அறிமுகமாவேன் என்று கூறியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த டுவீட்டை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் லைக், ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment