40 ஆண்டுகளாகத் தொடர்ந்து தூங்காத பெண்? உண்மையில் சாத்தியமா?
- IndiaGlitz, [Wednesday,September 08 2021]
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயதிற்குப் பிறகு தூங்குவதையே நிறுத்தி விட்டாராம். தொடர்ந்து 40 ஆண்டுகளாகத் தூங்காமல் இருக்கும் இவரைப் பார்த்து அவருடைய கணவர், உறவினர், கிராமமக்கள் உட்பட பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் இவர்கள் தவித்துவரும் தவிப்புக்கு அளவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
லி ஜானிங் எனும் பெண்மணிக்குத்தான் இப்படி தூங்காமல் இருக்கும் வியாதி இருக்கிறது. உண்மையில் வருடக்கணக்கில் தூங்கிக்கொண்டே இருக்கும் பல சம்பவங்களை பார்த்து இருப்போம். ஆனால் தூங்காமல் அலைந்து கொண்டிருக்கும் முதல் கதை இதுதான் என்பதும் கவனிக்கத் தக்கது.
உண்மையில் தன்னுடைய கணவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது லி ஜானிங் இரவுநேரம் என்றுகூட பார்க்காமல் வீட்டை சுத்தம் செய்வாராம். என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிற வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வாராம். சமீபத்தில் பெய்ஜிங்கில் உள்ள தூக்க மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் லீ ஜானிங் தூங்குவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கணவர் பேசிக் கொண்டிருந்தாலும் லீ ஜானிங் தன்னையறியாமல் கண்களைக் குறைத்துக் கொண்டு தூங்குகிறார். ஆனால் வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டும்தான் அவருடைய கண்கள் குறைந்து போகிறது. அதற்குமேல் அவரால் தன் கண்களை சுருக்க முடிவதில்லை. அதனால் லீ ஜானிங் தூங்குவதும் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.