பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. என்ட்ரி ஆன ஜீடிவி சீரியல்... இந்த வார டிஆர்பி ரேட்டிங்..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

தமிழ் சீரியல்களை பொருத்தவரை, சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு மட்டுமே போட்டியாக இருந்த நிலையில், தற்போது டாப் 10 இடத்தில் ஜீ டிவி சீரியலும் இணைந்துள்ளது. இதனால் போட்டி அதிகமாகி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் பத்தாவது இடத்தை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியல் பிடித்துள்ளது. இதனை அடுத்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு டாப் 10 இடத்தில் ஜீ டிவி சீரியல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', எட்டாவது இடத்தில் 'மல்லி' ஆகிய சீரியல்கள் உள்ளன.

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்தாலும், ஒட்டுமொத்த டிஆர்பி ரேட்டிங்கில் 'சிறகடிக்க ஆசை' இந்த வாரம் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முத்து, மீனா ஆகிய இரண்டு கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதது, மற்றும் இந்த இரண்டு கேரக்டர்களையும் டம்மி ஆக்கி வருவதை, இந்த சீரியலின் பின்னடைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆறாவது இடத்தில் சன் டிவியின் 'ராமாயணம்' உள்ள நிலையில், ஐந்தாவது இடத்தில் 'சுந்தரி' சீரியல் உள்ளது. மேலும், நான்காவது இடத்தில் 'மருமகள்', மூன்றாவது இடத்தில் 'மூன்று முடிச்சு', இரண்டாவது இடத்தில் ’சிங்க பெண்ணே', மற்றும் முதல் இடத்தில் 'கயல்' ஆகிய சீரியல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்கவில்லை என்றும், விஜய் டிவி சீரியல்களை விட குறைவாகவே டிஆர்பி புள்ளிகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளதாகவும், சரியான டாஸ்க் மற்றும் சுவராசியமான நிகழ்வுகள் இல்லை என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.