இந்த வாரம் ஓடிடியில் 3 தமிழ் படங்கள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதும் இதனால் சினிமா ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் உள்பட 10 படங்களுக்கு மேல் ஓடிடியில் வெளியாக இருப்பதை எடுத்து சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக உள்ளன.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ’ருத்ரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லைகா தயாரிப்பில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவான ’திருவின் குரல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’சொப்பன சுந்தரி’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த மூன்று தமிழ் திரைப்படங்களோடு மற்ற மொழி படங்களும் சில வெளியாக உள்ளன அது குறித்து தற்போது பார்ப்போம்
’Air Movie’ என்ற ஆங்கில படம் அமேசான் பிரைம் ஓடிடியில், ’The Mother’ என்ற ஆங்கில திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ’Evil Dead Rise’ என்ற ஆங்கில படம் ப்ரைமில், ’Missing Dead Or Alive’ என்ற ஆங்கில திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மேலும் பிந்துமாதவி நடித்த ‘நியூசென்ஸ்’ என்ற தெலுங்கு வெப் தொடர் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘விக்ரம் வேதா’ இந்தி திரைப்படம் ஜியோ சினிமாவில், ’Jawanum Mullapoovam’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments