த்ரிஷாவின் 'ராங்கி' உள்பட இந்த வார ஓடிடி ரிலிஸ் படங்கள்: முழு விபரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 24 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தில் த்ரிஷா நடித்த ‘ராங்கி’ உள்பட இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் சில வேறு மொழிப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.

த்ரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜீ5 ஓடிடியில் அயலி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. பெண்கள் பருவமெய்தியவுடன் திருமண வாழ்வில் தள்ளப்படும் மரபு கொண்ட கிராமத்தில் இருந்து மருத்துவராக போராடும் சிறுமியை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

மேலும் இந்த வாரம் ‘18 பேஜஸ்’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், ‘சாட்டர்டே நைட்’ என்ற மலையாள திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், அன் ஆக்சன் ஹீரோ என்ற இந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், 'எங்கள் ஹாஸ்டர்’ என்ற வெப்தொடர் அமேசான் ஓடிடியிலும், ’ஆனந்தம் பரமானந்தம்’ என்ற மலையாள படம் சிம்ப்ளி சௌத் என்ற ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

மேலும் ‘ஷாட்கன் வெடிங்’ என்ற ஆங்கில படம் அமேசன் பிரைமிலும், ஜான் பாஸ் இந்துஸ்தான் கே’ என்ற இந்தி திரைப்படம் ஜீ5 ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.