close
Choose your channels

இந்த வாரம் ஓடிடியில் ரூ.100 கோடி வசூல் குவித்த சூப்பர் ஹிட் படம்.. முழு விவரங்கள்..!

Thursday, July 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் விஜய் சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ என்ற திரைப்படம் திரையரங்கில் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூலாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’மகாராஜா’ திரைப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ’பகலறியான்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. வெற்றி, அக்ஷயா உள்பட பலர் நடித்த இந்த படம் கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘ஹரோம் ஹரா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ’ஆரம்பம்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் , பிளாட் என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில் , ‘ஜிலேபி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் ’அக்னிசாட்சி’ என்ற தெலுங்கு வெப்சீரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில், ‘மந்தாகினி’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment