இந்த வார ஓடிடி ரிலீஸில் என்னென்ன படங்கள்?

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு இணையாக ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்

முதல் நீ முடிவும் நீ: தர்புகா சிவாவின் இயக்கத்தில் உருவான ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படம் ஜீ தமிழ் ஓடிடியில் நாளை வெளியாகிறது. கடந்த 90களில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் கதையம்சம் கொண்டது இந்த படம் பார்வையாளர்களை தங்களுடைய பள்ளி வாழ்க்கைக்கு திரும்பி போகும் அளவுக்கு உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்புகள் விற்கப்படும்: சத்யராஜ் நடிப்பில் தீரன் இயக்கிய இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியான நிலையில் நாளை டென்ட் கொட்டாய் என்ற ஓடிடியில் வெளியாகிறது என்பதும் இந்த படம் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

பேச்சிலர்: சமீபத்தில் திரையரங்கில் வெளியான ஜிவி பிரகாஷின் சூப்பர் ஹிட் படமான பேச்சிலர் திரைப்படம் சோனிலைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஏற்கனவே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ ஹாட்ஸ்டாரிலும், நானி, சாய்பல்லவி நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் மேலும் ஒருசில தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாகிறது.

More News

பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த பம்பர் லாட்டரி!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தியை பார்த்து வந்த நிலையில்

தோனி கலெக்ஷனில் இணைந்திருக்கும் பழைய கார்… அப்படியென்ன ஸ்பெஷல்?

ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு பெயர்போன நம்முடைய கேப்டன் தல தோனி

பிரபல இயக்குனரின் வழக்கு: சின்மயி, லீலா மணிமேகலைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பதிவு செய்த வழக்கில் பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

கரகர குரலால் வேலை இழப்பு... நியாயம் கேட்ட பெண்மணிக்கு 1 கோடி கிடைத்த சம்பவம்!

இங்கிலாந்த நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் சத்தமாகப்

தடுப்பூசியை விரும்பாமல் பாடகி செய்த காரியம்… சோகத்தில் முடிந்த சம்பவம்!

செக் குடியரசு நாட்டில் பிரபல நாட்டுப்புற பாடகி ஒருவர் கொரோனா