ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் சூப்பர் படம்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் மூன்று முதல் நான்கு புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஜூலை 14ஆம் தேதி அதாவது நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தகவல்களை பார்க்கவும். இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆகிறது என்றாலும் அந்த படமும் சூப்பர் ஹிட் ஆன படம் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது
சமீபத்தில் திரையரங்கம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’தண்டட்டி’ என்ற திரைப்படம் தான் நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடித்த படம் தான் ‘தண்டட்டி’. இந்த படத்தில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, உட்பட பலர் நடித்துள்ளனர்.
மேலும் ஹாட்ஸ்டாரில் ’TheTrial’ என்ற இந்தி தொடரும், நெட்பிளிக்ஸில் ’Quarter back’, ‘Survival Of The Thichkest’,‘Mr Car And The Knights Templar' ஆகிய ஆங்கில படங்களும், சிம்ப்ளி சவுத் ஓடிடியில் 'Ntikkakkakkoru Premandaarnnu’ என்ற மலையாள திரைப்படமும் வெளியாகவுள்ளது. ஜீ5 ஓடிடியில் ’Maya Bazaar For Sale’ என்ற இந்தி திரைப்படம் ’MenToo’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments