விஜய்சேதுபதி, நயன்தாரா படங்கள் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வரும் 30ஆம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த படங்கள் உள்பட 4 தமிழ் படங்கள் மற்றும் சில வேறு மொழிப் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது

விஜய் சேதுபதி நடித்த ’டிஎஸ்பி’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடியில் வெளியாகவிருக்கிறது

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’கோல்ட்’ என்ற திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. அதேபோல் விஷ்ணு விஷால் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ராஜ்கிரண், அதர்வா நடித்த ’பட்டத்து அரசன்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது மேலும் ’உடன்பால்’ என்ற தமிழ் திரைப்படமாக சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் ‘பட்டர்பிளை’ என்ற தெலுங்கு திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், ShefeekkinteSanthosham என்ற மலையாளத் திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடியிலும் வெளியாக உள்ளது

மொத்தத்தில் இந்த வாரம் ஓடிடியில் பிரபலங்களின் படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்: செல்வராகவன் டுவிட்டுக்கு என்ன அர்த்தம்?

துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்' என செல்வராகவன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதை அடுத்து இந்த ட்வீட்டுக்கு என்ன அர்த்தம் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

அசின் மகளா இவர்? எவ்வளவு வளர்ந்துவிட்டார்...  ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின் என்பதும்,  கமல்ஹாசனுடன் 'தசாவதாரம்' விஜய்யுடன் 'போக்கிரி' அஜித்துடன் 'ஆழ்வார்' சூர்யாவுடன் 'கஜினி' என பல சூப்பர் ஹிட்

அந்தரத்தில் 'பாண்டவர் இல்லம்' நடிகை.. பலூன் ஊஞ்சலில் கர்ப்பிணி போட்டோஷூட்!

அந்தரத்தில் பலூன் ஊஞ்சலில் 'பாண்டவர் இல்லம்' சீரியல் நடிகை எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

'துணிவு' 'வாரிசு' ரிலீஸ் தேதி இதுதான்.. முன்பதிவில் கசிந்த தகவல்!

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதை அடுத்து இரு படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஏன் விஜய்க்கு போட்டியா இருக்கக்கூடாதா? TTF வாசன் பேட்டி

பிரபல யூடியூபர் TTF வாசன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அந்த சர்ச்சைகள் காரணமாக அவர் வழக்குகளில் சிக்கி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.