ஒவியா படம் உள்பட 3 தமிழ் படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் மற்றும் சில தென்னிந்திய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.

இந்த வாரம் ஆகா ஓடிடியில் ’பூமர் அங்கிள்’ என்ற திரைப்படம் வெளியாகிறது. யோகி பாபு, ஓவியா, லொள்ளு சபா சேஷு, சோனா, ரோபோ சங்கர், கேபிஒய் பாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்

இதனை அடுத்து ஆகா ஓடிடியில் ’சிறகன்’ என்ற திரைப்படம் வெளியாகிறது. கஜரத், வினோத் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் என்பதும் வெங்கடேஸ்வர ராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் டெண்ட்கொட்டா ஓடிடியில் இந்த வாரம் ’ஆபரேஷன் லைலா’ என்ற திரைப்படம் வெளியாகிறது. ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இனி மற்ற மொழி படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஹன்சிகா நடித்த ‘105 மினிட்ஸ்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘மைதான்’ என்ற இந்தி திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில், ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்ற மலையாள திரைப்படம் சோனிலைவ் ஓடிடியில் வெளியாகின்றன.