இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!
- IndiaGlitz, [Thursday,January 09 2025]
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாளை முதல் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்யா பிரதீப், ரிஷி ரித்விக் நடித்த ‘திரும்பி பார்’ என்ற திரைப்படம் சவுத் சிம்ப்ளி என்ற ஓடிடியில் வெளியாகிறது. இந்த ஒரு படம் தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் வெளியாகின்றன.
அமேசான் ப்ரைமில் ’பச்சலாமல்லி’ என்ற தெலுங்கு படமும் ‘பிரேமி சூடு’ என்ற தெலுங்கு படமும் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் ஆஹா ஓடிடியில் ‘நீலிமேகா ஷ்யாமா’ என்ற தெலுங்கு படமும், ‘ஹிடன்சீக்’ என்ற தெலுங்கு படமும் ரிலீஸ் ஆகிறது. மேலும் ‘பிரேக் அவுட்’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
அதேபோல் அமேசான் ப்ரைமில் ‘துருவதாரே’ என்ற கன்னட படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.