இந்த வாரம் 2 தமிழ்ப்படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!
- IndiaGlitz, [Thursday,December 19 2024]
இந்த வாரம் திரையரங்குகளில் வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை 2’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடியிலும் இரண்டு தமிழ் படங்கள் உள்பட சில தென்னிந்திய படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
அதர்வா, சரத்குமார் நடித்த ’நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘ஜீப்ரா’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியிலும், ’லீலா விநோதம்’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல் ‘முரா’ என்ற மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில், ‘சப்தகாண்டம்’ என்ற மலையாள திரைப்படம் சைனா பிளே ஓடிடியில், ‘கடக்கன்’ என்ற மலையாள திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில், ‘பலோட்டி 90s கிட்ஸ்’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.