'போட்' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு தகவல்கள்..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் யோகி பாபு நடித்த மூன்று தமிழ் படங்களும் சில தெலுங்கு கன்னடம், மலையாள படங்கள் வெளியாகின்றன. அது குறித்து தற்போது பார்ப்போம்

யோகி பாபு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ’போட்’ திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியான நிலையில் இந்த படம் தற்போது டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதேபோல் ’டபுள் டக்கர்’ என்ற தமிழ் படம் அமேசான் பிரைம் ஓடிடியில், ‘மாய நிழல்கள்’ என்ற தமிழ் படம் ஆகா ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்கள் குறித்து பார்ப்போம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘சில்லி சிக்கன்’ என்ற கன்னட படம் வெளியாகியுள்ளது.

அதேபோல் ’ஹனிமூன் எக்ஸ்பிரஸ்’ என்ற தெலுங்கு படம் ப்ரைம் ஓடிடியில், ’ஷேட்ஸ் ஆப் பேபி பிங்க்’ என்ற படம் ஈடிவி வின் ஓடிடியில், பிரபுத்துவ ஜூனியர் கலாசாலா’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில், ‘புருஷோத்தமடு’ என்ற தெலுங்கு படம், ’சாரங்கதாரியா’ என்ற தெலுங்கு படமும் ஆகா ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ‘படி’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ’சாங்கூர் பங்கர் ராஜா’ என்ற தெலுங்கு படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் ‘புல்லு ரைசிங்’ என்ற மலையாள திரைப்படம், ‘பட்டப்பகல்’ என்ற மலையாள திரைப்படம் ஆகா ஓடிடியில், ’சீனா டிராபி’ என்ற மலையாள திரைப்படம் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது.

More News

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை:  நடிகை சமந்தாவின் திடுக்கிடும் பதிவு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மலையாள திரை

கோல்டன் ஸ்பேரோ.. என் நெஞ்சுல ஏரோ.. தனுஷின் NEEK படத்தின் சிங்கிள் பாடல்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த

மோகன்லால் ஒரு கோழை.. பிரபல நடிகை ஆவேசம்..!

மோகன்லால் ஒரு கோழை என பிரபல நடிகை ஆவேசமாக கூறியிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கேரக்டர்? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்

முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.. முன்னாள் மனைவியான பிரபல நடிகை திடுக் குற்றச்சாட்டு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டில் பிரபல நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.