இந்த வாரம் ஒரே ஒரு சந்தானம் படம் மட்டும் தான்.. ஓடிடி ரிலீஸ் தகவல்..!
- IndiaGlitz, [Friday,June 28 2024]
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது போல் திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு சந்தானம் நடித்த தமிழ் படம் மட்டும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நிலையில் மற்ற மொழி படங்கள் என்னென்ன ரிலீஸ் ஆகின்றன என்பதை பார்ப்போம்.
சந்தானம் நடித்த ’இங்க என்ன சொல்லுது’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில் இந்த படம் 5 மாதங்கள் கழித்து தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் வெளியாகிறது. சந்தானம், மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷ், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்த இந்த படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார். இந்த ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாகும் நிலையில் இரண்டு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களும் இந்த வாரம் வெளியாகிறது
இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகிறது. பிரித்விராஜ் சுகுமாரன், நிகிலா விமல் நடிப்பில் உருவான இந்த படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார். இதையடுத்து Higuita என்ற மலையாள திரைப்படம் சைனா பிளே என்ற ஓடிடியில் வெளியாகிறது.
மேலும் இந்த வாரம் 'லவ் மவுலி’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘பாஜிவாயு வேகம்’ என்ற தெலுங்கு படம் வெளியாகிறது. கார்த்திகேயா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.