இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,December 21 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதும் குறைந்தது 3 அல்லது 4 படங்கள் வெளியாகும் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வருவதால் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் மற்ற மொழி திரைப்படங்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் ’குய்கோ’. விதார்த், யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த படத்தை அருள் செழியன் இயக்கியிருந்தார் என்பதும் அந்தோணி தாசன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து வெளியாகும் வேறு மொழி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சோனி லைவ் ஓடிடியில் ‘டோபி’ என்ற கன்னட திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘ஆதிகேசவா’ படமும், அமேசான் ப்ரைமில் ‘தகருபால்யா’ என்ற படமும், ’கரீம்நகர்ஸ் மோஸ்ட் வாண்டட்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.