close
Choose your channels

இந்த வாரம் ஓடிடியில் 'மார்க் ஆண்டனி' உட்பட எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

Thursday, October 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

அந்த வகையில் திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் உட்பட ஒரு சில திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன. இது குறித்த முழு விவரங்கள் தற்போது பார்ப்போம்

விஷால் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இன்று முதல் அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாகிறது.

அதேபோல் ஹாட்ஸ்டாரில் வெளியான ’மத்தகம்’ என்ற வெப் தொடர் அடுத்த சீசன் இன்று வெளியாகிறது. அதர்வா மற்றும் விதார்த் நடித்த இந்த வெப் தொடர் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் ’தி கிரேட் இந்தியன் சூசைட்’ என்ற தமிழ் சீரிஸ் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது

மேலும் ’ஜெயிலர்’ விநாயகன் முக்கிய கேரக்டரில் நடித்த ‘காசர்கோல்ட்’ என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ’மட்டிக்கதா’ என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியில், ‘பிரேம விமானம்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஜீ5 ஓடிடியில், ‘மிஸ்டர் நாகபூஷனம்’ என்ற தெலுங்கு திரைப்படம் ஈடிவி வின் என்ற ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment