மார்ச் 10ஆம் தேதி இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? முழு விபரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் திரையரங்களில் அதிகபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதற்கு இணையாக ஓடிடியிலும் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். பெரும்பாலும் திரையரங்குகளில் ரிலீசான படங்கள் தான் ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் ஓடிடியில் ரிலீசாகும்போது அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த வாரம் ஓட்டுகள் ரிலீசாகும் படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
டாடா: கவின், அபர்ணாதாஸ் நடித்த இந்த படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரன் பேபி ரன்: ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பொம்மை நாயகி: யோகிபாபு, அன்புதுரை, சுபத்ரா, ஜிஎம் குமார் உள்பட பலர் நடித்த இந்த படம் யோகிபாபுவின் மெருகேற்றிய நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய படம். கோயில் திருவிழாவில் காணாமல் போகும் மகளைப் பதைபதைப்புடன் தேடிச் செல்லும் யோகிபாபு, அவளை மயங்கிய நிலையில் கண்டெடுக்கிறார். மகளுக்கு நடந்த கொடுமையின் துயரை மனதில் புதைத்துக்கொள்ளும் அவர் ஒரு கட்டத்தில் குமுறி எழுகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் ஜீ5 தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர்: இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி, அமலா பால், வினய், சரத்குமார், சினேகா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
மேலும் சோனிலைவ் ஓடிடியில் ’கிறிஸ்டி’ என்ற மலையாள படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’லூதர்’ என்ற ஆங்கில படம், ஜீ5 ஓடிடியில் ‘ராம்யோ’ என்ற கன்னட படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’ரேகா’ என்ற மலையாள படம், சைனா ப்ளே என்ற ஓடிடியில் ‘சதுரம்’ என்ற மலையால படம் உள்ளிட்ட ஒருசில படங்களும் இந்த வார ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout