இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம்.. அதுவும் நேரடி ரிலீஸ்.. ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ஓடிடியில் வெளியாகிறது. ஆனால் அந்த படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், டிடி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படம் ’மத்தகம்’. இந்த படம் நேரடியாக நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது என்பதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘குட் நைட்’ மணிகண்டன் வில்லனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் அமைந்துள்ள இந்தப் படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘அமலா’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில், ஓ சாதியா’ என்ற தெலுங்கு படம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. ’அன்னபூர்ணா போட்டோ ஸ்டுடியோ’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில், ‘ஆயிரத்தொண்ணு நுணகல்’ என்ற மலையாள திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
மேலும் ஜீ5 ஓடிடியில் ‘சத்ரபதி’ என்ற இந்தி திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. மேலும் Taali S1 மற்றும் என்ற இந்தி வெப் சீரிஸ், ’FuhSe Fantasy S2’ என்ற வெப் சீரிஸ் ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com