இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? மாயா கிரேட் எஸ்கேப்..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

கடந்த வாரம் மிக மோசமாக கேப்டன்சி செய்த மாயாவை இந்த வாரம் ஒருவர் கூட நாமினேஷன் செய்யாமல் இருந்ததால் அவர் நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி உள்ளதாக தெரிகிறது.

இந்த வாரம் நாமினேஷன் படலம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் அனைத்து போட்டியாளர்களிடம் பிக் பாஸ் இருவரை நாமினேஷன் செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து விஷ்ணு, ஜோவிகா, விசித்ரா, கூல் சுரேஷ், ரவீனா ஆகிய ஐவரும் விக்ரமை நாமினேட் செய்தனர். இதனை அடுத்து பிராவோவை மணி சந்திரா, கானா பாலா,விக்ரம் ஆகியோர் நாமினேஷன் செய்தனர்

அதன்பின்னர் கூல் சுரேஷ், மணிசந்தரா, விசித்ரா ஆகியோர் அக்‌ஷயாவை நாமினேட் செய்தனர். மேலும் அக்ஷயா, நிக்சன் ஆகியோர் விசித்ராவை நாமினேட் செய்தனர். மாயா, பூர்ணிமா மற்றும் நிக்சன் ஆகியோர் மணி சந்திராவையும், பூர்ணிமாவை தினேஷ், கானா பாலா, அர்ச்சனா ஆகியோர்களும் நாமினேட் செய்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வாரம் விக்ரம், பிராவோ, அக்‌ஷயா, விசித்ரா, மணி சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது