பிக்பாஸ்: இந்த வார எவிக்சன் பட்டியல் லிஸ்ட் இதோ

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் நால்வர் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இறுதிக்கு ஏற்கனவே ஜனனி தகுதி பெற்றுவிட்டதால் மீதி ஐவரில் மூவர் இறுதி போட்டிக்கு செல்ல முடியும்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ஐவரும் எவிக்சன் பட்டியலில் உள்ளதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். இவர்களில் மூவரை மக்கள் வாக்களித்து காப்பாற்றுவார்கள், குறைந்த வாக்குகள் வாங்கிய இருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படவுள்ளார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனனவருக்கும் தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். டாஸ்க்குகள் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மக்களின் வாக்குகளே போட்டியாளர்களை காப்பாற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.