இந்த வாரம் எவிக்சன் இந்த போட்டியாளரா? ஜஸ்ட் மிஸ் ஆன நிக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நிக்சன் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பதிலாக வேறொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அர்ச்சனா, நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு, தினேஷ், அனன்யா ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் மிட்வீக் எவிக்சனில் அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மீதமுள்ள ஐவரில் நிக்சன் குறைந்த வாக்குகள் பெற்றதாக செய்திகள் வெளியானது.
இருப்பினும் அர்ச்சனா தவிர மற்ற அனைத்து போட்டியாளர்கள் கிட்டத்தட்ட ஒரே சதவீதத்தில் வாக்கு வாங்கி இருந்ததால் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கூல் சுரேஷ் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டதாகவும், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிக்சன் தப்பித்து விட்டதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே கூல் சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டதாகவும் தான் வெளியே போக வேண்டும் என்று கூறியதோடு சுவரேறி குதிக்கவும் முயற்சி செய்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய விருப்பத்தின் பேரில் மக்கள் அவரை வெளியே அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com