குக் வித் கோமாளி: இந்த வாரம் யார் யாருக்கு எந்தெந்த கெட்டப்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காலையிலேயே பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியில் உள்ள பிரபலங்களின் கெட்டப்பில் கோமாளிகள் கலக்குகின்றனர்.
மணிமேகலைக்கு சாண்டி மாஸ்டர் கெட்டப்பும், புகழுக்கு பாபா மாஸ்டர் கெட்டப்பும், ஷிவாங்கிக்கு சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராம் கெட்டப்பும், பாலாவுக்கு நீயா நானா கோநாத் கெட்டப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த வாரம் அஸ்வினுக்கு கோமாளியாக ஷிவாங்கியும், ஷகிலாவுக்கு கோமாளியாக மணிமேகலையும், பவித்ராவுக்கு கோமாளியாக பாலாவும், கனிக்கு கோமாளியாக புகழும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தவாரம் எலிமினேட் வாரம் என்பதால் ஷகிலா, கனி, பவித்ரா மற்றும் அஸ்வின் ஆகிய நால்வரில் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பது நாளை தெரிய வரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com