குக் வித் கோமாளி: இந்த வாரம் யார் யாருக்கு எந்தெந்த கெட்டப்?

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காலையிலேயே பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று காலை ஹாட்ஸ்டாரில் வெளிவந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியில் உள்ள பிரபலங்களின் கெட்டப்பில் கோமாளிகள் கலக்குகின்றனர்.

மணிமேகலைக்கு சாண்டி மாஸ்டர் கெட்டப்பும், புகழுக்கு பாபா மாஸ்டர் கெட்டப்பும், ஷிவாங்கிக்கு சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராம் கெட்டப்பும், பாலாவுக்கு நீயா நானா கோநாத் கெட்டப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த வாரம் அஸ்வினுக்கு கோமாளியாக ஷிவாங்கியும், ஷகிலாவுக்கு கோமாளியாக மணிமேகலையும், பவித்ராவுக்கு கோமாளியாக பாலாவும், கனிக்கு கோமாளியாக புகழும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தவாரம் எலிமினேட் வாரம் என்பதால் ஷகிலா, கனி, பவித்ரா மற்றும் அஸ்வின் ஆகிய நால்வரில் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பது நாளை தெரிய வரும்

More News

தேர்தல் துளிகள்: 13 மார்ச் 2021

தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் நாயகி மற்றும் கேரக்டர் குறித்த தகவல்!

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் அருள் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரு

நான் தட்டுனா அவருக்கு கேட்கும்: எஸ்பி ஜனநாதன் குறித்து கோபமாக கூறிய விஜய்சேதுபதி!

நான் தட்டினால் அவருக்குக் கேட்கும், அவர் என் டைரக்டர் என விஜய்சேதுபதி, இயக்குனர் எஸ்பி ஜனநாதன் குறித்து கோபமாக கூறியதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

பிரபல தமிழ் திரையுலகின் வில்லன் நடிகருக்கு கொரோனா: விரைவில் குணமடைவேன் என டுவீட்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக

'வலிமை'யை அடுத்து 'டாக்டர்' அப்டேட் தந்த கலெக்டர்: 'வேற லெவல்' என சிவகார்த்திகேயன் பாராட்டு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 'வலிமை' குறித்து ஒரு அப்டேட்டை தந்தார். அதில் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது அவசியம்