இணையத்தில் வைரலாகும் செருப்பு செல்பி! திரை நட்சத்திரங்கள் பாராட்டு

  • IndiaGlitz, [Wednesday,February 06 2019]

கடந்த சில நாட்களுக்கு முன் சமூக இணையதளத்தில் ஒரு புகைப்படம் பதிவாகி மிகக்குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் வைரலானது. இந்த புகைப்படத்தில் ஒரு சிறுவன் தன் கையில் செருப்பை மாட்டிக் கொண்டு அதை செல்போன் போல் பாவித்து செல்ஃபி எடுக்க முயல, அதற்கு சில சிறுவர்கள் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர்.

இந்த புகைப்படத்தை பாலிவுட் பிரபலங்களான அமிதாப்பச்சன், கஸ்பேகர் , அனுபம் கேர், பொமன் இரானி உள்பட பலர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இந்த புகைப்படத்திற்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் பாராட்டு தெரிவித்தனர். கள்ளங்கபடம் இல்லாத அந்த சிறுவர்களின் முகத்தில் தெரியும் சந்தோஷம் விலை மதிப்பில்லாதது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படம் குறித்து கூறுகையில், 'இந்த புகைப்படம் என் நெஞ்சை தொட்டுவிட்டது. அந்த சிறுவர்களின் சிரிப்பை பார்த்து கொண்டே இருக்கின்றேன். இந்த சிறுவர்கள் குறித்து யாரேனும் தகவல் தந்தால் அவர்களுக்கு செருப்புகளும், செல்போன்களும் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.