2000 ரூபாய் நோட்டில் செய்யப்பட்ட உடையை அணிந்தாரா பிரபல நடிகை?
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு கடந்த மாதம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ஒரு அசாதாரண நிலை இருந்து வருகிறது. ஒன்று அல்லது இரண்டு 2000 ரூபாய் நோட்டை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கவோ அல்லது ஏடிஎம்-இல் இருந்து எடுக்கவோ மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் ரூ.2000 நோட்டுக்களால் ஆன உடையை அணிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மகேஷ் பாபு நடித்த 'நே ஒக்கடினே என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் நடித்து கொண்டிருகும் நடிகை க்ரிட்டி சனோன் ரூ.2000 நோட்டுக்களால் ஆன உடையை அணிந்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து நடிகை க்ரிட்டி சனோன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'யாரோ ஒருவர் போட்டோஷாப் மூலம் செய்த வேலை இது என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments