ஜெயலலிதா மகள் என்று கூறப்படும் இந்த பெண் உண்மையில் யார்?

  • IndiaGlitz, [Tuesday,December 13 2016]

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாரிசு மற்றும் குடும்ப வாரிசு யார் என்று சொல்லாமலே மரணம் அடைந்துவிட்டதால் அவர் வகித்து வந்த பதவி மற்றும் அவருடைய சொத்துக்களை அடைய பலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மேலே உள்ள படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருசில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் உள்ள பெண் குறித்து பிரபல பாடகி சின்மயி விளக்கம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ளார். இந்த பெண் பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் இவர் ஒருசில குறும்படங்களில் நடித்துள்ளார் என்றும் இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.

இனிமேலாவது ஊடகங்கள் இவரை பற்றி தவறாக செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சின்மயி மற்றும் இந்த பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.