ரசிகர்களுக்கு ஆபத்து என்றவுடன் பதறிய தளபதி விஜய்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு நடிகர் கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலே தனது ரசிகர்களை அரசியல் உள்பட சுயநலத்திற்கு பயன்படுத்தி வரும் நடிகர்கள் மத்தியில் ரசிகர்களிடம் உண்மையான பாசம் வைத்துள்ள ஒருசிலர் நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. ரசிகர்கள் வீட்டு கல்யாணம் ஆனாலும், துக்க சம்பவங்கள் நடந்தாலும் முதல் ஆளாக நேரில் சென்று அவர்களின் இன்ப துன்பங்களில் விஜய் கலந்து கொள்வார்.
இந்த நிலையில் நேற்று 'தளபதி 63' படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல முற்படுகையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் பின்கேட்டில் தன்னை காண ஏராளமான ரசிகர்கள் இருப்பதை கேள்விப்பட்டு அவர்களை பார்க்க சென்றார்.
ரசிகர்கள் அருகே செல்வதற்கு ஒரு சின்ன கால்வாய் தடையாய் இருந்தபோதிலும் அதனை தாண்டி சென்ற விஜய், ரசிகர்களை நோக்கி இன்முகத்துடன் கையசைத்தார். அப்போது ரசிகர்களின் ஆர்வத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட அங்கு பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பு திடீரென சரிந்தது. உடனே ஒரு நொடி கூட யோசிக்காமல் அந்த தடுப்பை தனது கையால் கிழே விழுந்துவிடாமல் விஜய் தடுத்தார். விஜய்யை அடுத்து அருகில் இருந்த மற்றவர்களும் அந்த தடுப்பு கீழே விழாமல் தடுத்ததால் ரசிகர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது ரசிகர்களுக்கு ஒரு சின்ன காயம் கூட தன்னால் ஏற்படக்கூடாது என்ற இந்த நல்ல மனதிற்காகத்தான் அவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதில் வியப்பில்லைதானே!
#Thalapathy #Vijay from Today's Shoot.#Thalapathy63 @Thalapathy63Off pic.twitter.com/zM9PLnfWJ6
— #Thalapathy63 (@Thalapathy63Off) March 12, 2019
Here is the Clear Video from the Spot where #Thalapathy #Vijay Instantly Reacts towards the Mishap. @actorvijay ❤ @Thalapathy63Off #Thalapathy63 pic.twitter.com/7ogwaNdtiD
— #Thalapathy63 (@Thalapathy63Off) March 12, 2019
Watch till the End.! #ThalapathyVijay ❤ @actorvijay #Thalapathy63 @Thalapathy63Off pic.twitter.com/BLuVSpSW7n
— #Thalapathy63 (@Thalapathy63Off) March 12, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com