இந்த ஒரு வீடியோ விக்ரம் எவிக்சனை மாற்றுமா? வெளியேற்றத்தை தடுக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விக்ரம், ரவீனா மற்றும் விசித்ரா ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே நாமினேஷனில் உள்ள நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விக்ரம் தான் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிகிறது. இதனால் விக்ரம் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விக்ரமின் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் தொடங்கியதிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா, விக்ரமை எந்த மாதிரியாக நடத்தி இருக்கிறார்கள் என்பது குறித்த இரண்டு நிமிட வீடியோ வைரல் ஆகி வருகிறது. விக்ரமை கரப்பான் பூச்சி என்று சொல்வது முதல் நசுக்கி விடுவேன் என்று சொல்வது வரை பல காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
கிட்டத்தட்ட மாயா மற்றும் பூர்ணிமா இருவருமே விக்ரமை ஒரு வேலைக்காரன் போலவே நடத்தி வந்தனர் என்பதும் அவ்வப்போது அவமானப்படுத்தி வந்தனர் என்பதும் இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
கமலஹாசனே மாயாவிடம் கரப்பான் பூச்சி என விக்ரமை கூறியது தவறு என்று தட்டிக் கேட்டார் என்பதும் விக்ரமின் சகிப்புத்தன்மையை பயன்படுத்தி மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் நடத்திய கேவலமான செயல்கள் இந்த வீடியோவில் உள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் மாயா மற்றும் பூர்ணிமாவால் அவமானப்படுத்தப்பட்ட விக்ரமை இன்னும் கொஞ்ச நாள் வீட்டில் வைத்திருக்கலாம் என்று பார்வையாளர்கள் நினைத்து அவருக்கு அதிக வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்த வாரம் வெளியேறுவது ரவீனாவாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Perfect edit for #Vickram 🔥🔥
— BB Mama (@SriniMama1) December 21, 2023
This video shows how he was used by #Maya #Poornima 🥲🥲#Archana reminded him many times but he never stood for him 🥲
He was treated as a slave till Monday
Superb @cascade94 👏#BiggBoss7Tamil #BiggbossTamil7 pic.twitter.com/iZPUkWy5uB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com