இந்த வகை ரத்தமா உங்களுக்கு??? அப்போ... கொரோனா உங்களை எட்டிக் கூட பார்க்காது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்காரன் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் அலறச் செய்யும் கொரோனா வைரஸ் தற்போது O ரத்த வகையினரை மட்டும் பெரிதாக அண்டாது என்ற ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் 75 ஆயிரம் பேரை வைத்து நடத்தப்பட்டது நடத்தப்பட்ட இந்த ஆய்வில் O-Positive, O- Negative ரத்த வகையைக் கொண்டவர்கள் கொரோனா வைரஸ்க்கு குறைவான அளவில் பாதிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் பரவலில் வயது, உடல் நிலை போன்ற காரணிகள் அதிக பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். உடல்நிலை பாதிப்பு மற்றும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படும் போது அவர்கள் நோயால் அதிகம் பாதிக்கப் படுவார்கள் எனவும் கூறுப்பட்டு இருந்தது. இந்நிலையில் மரபணு மற்றும் இரத்த வகையும் கொரோனா வைரஸ் பரவலில் பங்கு வகிக்கிறதா என்பதைக் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் மற்ற ரத்த வகையினரைவிட O ரத்த வகையைக் கொண்டவர்களுக்கு 9-18% நோய்த்தொற்று ஏற்படுவது குறைவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் மரபணு சோதனை நிறுவனமான 23andMe என்ற ஆய்வு நிறுவனம் இந்த முடிவினை வெளியிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடத்தப்பட்ட இதேபோன்ற இன்னொரு ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் A ரத்தவகை மிகவும் ஆபத்தானது என்ற ஆய்வு முடிவு வெளியிடப் பட்டு இருக்கிறது. எனவே A-Positive, A-Negative, AB-Positive, AB-Negative போன்ற ரத்த வகையினருக்கு கொரோனா நோய்த்தொற்று மிக எளிதாக தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் O-Positive O-Negative ரத்த வகையைக் கொண்டவர்கள் மற்ற ரத்தவகையை விட சற்று பாதுகாப்பான மனிதர்களாகக் கருதப்படுகின்றனர்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. medRxiv நிறவனம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட்ட ஆய்வில் A வகை ரத்தத்தைக் கொண்டவர்கள் மற்றவர்களை விட 33 விழுக்காடு அதிக ஆபத்துக் கொண்டவர்கள் என கூறப்பட்டுள்ளது. 682 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 33 விழுக்காட்டினர் A ரத்த வகையினராக இருந்தனர். ஆனால் இந்த ஆய்வில் O ரத்த வகையினர் மிகவும் குறைவான அளவில் பாதிக்கப் பட்டு இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலில் பெரும்பாலான நபர்கள் அறிகுறிகளே இல்லாமல் இருக்கின்றனர். சிலர் மட்டுமே அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் மரபணு மற்றும் ரத்த மாதிரிகளைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க முடியுமா என்கிற ரீதியில் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு வைரஸ் பரவலில் மரபணு மற்றும் இரத்த மாதிரிகள் எவ்வளவு பங்கு வகிக்கும் என்பதைக் குறித்து தெளிவாக அளக்க முடியாது என்ற கருத்தையும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், ஒவ்வொரு ரத்த மாதிரிகளும் ஒவ்வொரு மாதிரியான ஆன்டிஜென்களைக் கொண்டிருக்கும். இந்த ஆன்டிஜென்கள் நோய் எதிர்ப்பு மண்டலங்களோடு தொடர்புடையது எனவே சில ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் போன்ற நோய்த்தொற்றை எதிர்க்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கலாம். ஆனால் இது குறித்து தெளிவான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெளிவு படுத்தி உள்ளனர். மேலதிகமான ஆய்வுகள் மரபணு மற்றும் இரத்த மாதிரிகளுக்கு தேவைப்படுகிறது என்ற கருத்தையும் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments