இந்த வாரம் 2 எலிமினேஷனா? இரண்டும் மாயா குரூப்பா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் பிரதீப்பை பற்றி போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருப்பதில் இருந்து அவரது வெளியேற்றம் நியாயமானது இல்லை என்று குற்றம் சாட்டியவர்களுக்கே தற்போது புரிந்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் பூர்ணிமா தான் வெளியேறினார் என்று காலையில் செய்தி வெளியானது. ஆனால் தற்போது வெளியான தகவல்படி ஐஷு வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஒருவேளை பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகிய இருவரும் வெளியேறினார்களா? அல்லது ஐஷு மட்டும் வெளியேறினாரா? என்பது இன்றைய மற்றும் நாளைய எபிசோடில் தெரிய வரும்.

பூர்ணிமா, ஐஷு ஆகிய இருவரும் மாயா குரூப்பில் முக்கிய நபர்களாக இருந்த நிலையில் தற்போது இருவரில் ஒருவர் அல்லது இருவரும் வெளியேறினால் மாயா குரூப்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மொத்தத்தில் இந்த வார எலிமினேஷனை பிரதீப் ஆதரவாளர்களும் மற்ற நடுநிலை பார்வையாளர்களும் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.