'தளபதி 66' படத்தில் இந்த சூப்பர் ஸ்டாரா? ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டம் உள்ளது என்றும் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மகேஷ்பாபு நடித்த ’மகரிஷி’ என்ற திரைப்படத்தை வம்சி இயக்கி இருந்தார் என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நட்பின் அடிப்படையில் சமீபத்தில் மகேஷ்பாபுவை சந்தித்த வம்சி ’தளபதி 66’ திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றம் கேரக்டர் குறித்து கூறியதாகவும், அதற்கு மகேஷ்பாபு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் முதல் முறையாக விஜய் மற்றும் மகேஷ்பாபுவை ஒரே படத்தில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.