அழகுக்கு நிறம் எதற்கு? அடர்ந்த கறுப்பில் சாதனை படைத்த ஒரு மாடல் அழகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அழகு என்றாலே அது வெள்ளைதான் என்ற மனப்பான்மை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்க கருத்தால் தினந்தோறும் பல லட்சக் கணக்கான மக்கள் மனதளவிலும் உடல் அளவிலும் தாக்கப் படுகின்றனர். ஏன் சில நேரங்களில் ஜார்ஜ் பிளாய்ட் (US) போன்று கொலையும் செய்யப் படுகின்றனர். இத்தனை கொடூரமான சிந்தனைக்கு மத்தியில் தனது அடர்ந்த கறுப்பு நிறத்தையே தன்னுடைய தனித்தன்மையாக மாற்றிக் காட்டி இருக்கிறார் ஒரு மாடல் அழகி.
ஒரு காலத்தில் என்ன இத்தனை கறுப்பு? என உதாசினப் படுத்தப்பட்டவர்தான் 24 வயதான Nyakim gatwech. ஆனால் இன்றைக்கு 4 மில்லியன் டாலர் அளவிலான பேஷன் பொருட்களுக்கு இவர் விளம்பரதாரர். அதோடு இவரின் அட்டைப் படத்திற்கும் போட்டோ ஷுட்டிற்கும் பல கம்பெனிகளும் வரிசை கட்டி நிற்கின்றன. இவரை இன்ஸ்டா பக்கத்தில் 6,88,000 நெட்டிசன்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இத்தனை மாற்றத்திற்கும் காரணம் அமெரிக்க சாலையில் பயணம் செய்த நியாக்கிம்மை பார்த்து டிரைவர் ஒருவர், செலவு செய்தாவது உன்னுடைய நிறத்தை மாற்றக்கூடாதா? எனக் கேள்விக் கேட்டு இருக்கிறார். இந்த உதாசினக் கேள்வியால் மனம் நொந்துபோன நியாக்கிம் கறுப்பு எப்படி அசிங்கம் ஆகும் எனத் தன்னையே திருப்பி கேட்டுக் கொண்டதோடு அந்த கறுப்பின் மதிப்பை உலகத்திற்கு தற்போது எடுத்துக் காட்டி இருக்கிறார். இதனால் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மத்தியில் கறுப்பு எத்தனை அழகானது என நிரூபித்து காட்டி இருக்கிறார் நியாக்கிம்.
தென் சூடானை சார்ந்த பெற்றோர்களுக்கு எத்தோப்பியாவில் பிறந்தவர்தான் இந்த நியாக்கிம். எத்தோப்பியாவில் நிலவிய அரசியல் நெருக்கடியால் அகதிகளாக மாறி பல நாடுகளில் இவரது குடும்பம் தஞ்சம் புகுந்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவரது குடும்பம் நியூயார்க்கில் அகதிகளாக குடிபெயர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கிறது. ஆனால் மினியா போலிஸ் பகுதியில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கிய நியாக்கிமினின் வாழ்க்கை நன்றாக அமையவில்லை. காரணம் வெள்ளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் மினியா பகுதியில் நியாக்கிம் தொடர்ந்து நிற அடிப்படையில் கிண்டல் செய்யப்படுகிறார்.
தன்னுடைய நாட்டில் இப்படியொரு அவஸ்தையை உணராத அவர் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இப்படியே தொடர்ந்த இவரது வாழ்க்கைக்கு நடுவே ஒரு டிரைவர் கேட்ட கேள்வியால் எழுச்சி கொண்டு கறுப்பு எப்படி அசிங்கம் ஆகும் என விழிப்பு கொண்டு இருக்கிறார். பின்பு தன்னை பற்றிய புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார். இவ்வடி வளர்ந்த இவரது மாடல் திறமை ஒரு கட்டத்தில் பிரபல பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றிருக்கிறது.
இதனால் நிற வேறுபாடுகளுக்கு மத்தியில் மனம் வெதும்பி இருக்கும் பல லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்களுக்கு தற்போது நியாக்கிம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அதோடு 4 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தங்களையும் தன் கைவசம் வைத்திருக்கும் பிரபர மாடல் அழகியாக சாதனை படைத்து இருக்கிறார். வெள்ளைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் இந்த உலகில் தற்போது Queen of Dark என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரராக மாறி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com